ஜெயம் ரவியின் தனிஒருவன் படத்தில் அரவிந்த் சாமி நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது மாதவன் என்று கூறப்படுகிறது.
2015ல் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் தனி ஒருவன். இந்த படத்தில் அரவிந்த் சாமி மாஸ்ஸான வில்லனாக நடித்து பிரமிக்க வைத்தார்.ஹிப்ஹாப் ஆதியின் இசையில் உருவான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் படம் 100 கோடி வரை வசூல் செய்து சூப்பர் ஹிட்டானது.
சமீபத்தில் இந்த படத்தின் செக்கன்ட் பார்ட் எடுக்க முடிவு செய்துள்ளதாக ஜெயம் ராஜா மற்றும் ஜெயம் ரவி ஆகிய இருவரும் வீடியோ மூலம் தெரிவித்தனர். அதனையடுத்து அதற்கான 90% பணிகள் முடிந்து விட்டதாகவும் , தான் கமிட்டாகியுள்ள அனைத்து படங்களையும் முடித்து விட்டு தனி ஒருவன் – 2ல் கவனம் செலுத்த போவதாகவும் ஜெயம் ரவி கூறியிருந்தார். இந்நிலையில் முதல் பாகத்தில் அரவிந்த் சாமி நடித்த வில்லன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது மாதவன் என்று கூறப்படுகிறது.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…