சண்டக்கோழி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.?

Default Image

சண்டக்கோழி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது விஜய், சூர்யா என்று தகவல்.

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 2005 ஆண்டு வெளியான திரைப்படம் சண்டக்கோழி. அதிரடி சண்டைக்காட்சிகளுடன் உருவாகியிருந்த இந்த திரைப்படத்தில் மீரா ஜாஸ்மின் விஷாலிற்கு ஜோடியாக நடித்திருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியிருந்த இந்த திரைப்பட ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் ராஜ்கிரண், கஞ்சா கறுப்பு, சண்முகராஜன், மோனிகா, லால், போன்ற நடிகர்கள் நடிகைகள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

இந்த நிலையில், தற்போது இந்த படத்தில் விஷாலுக்கு பதிலாக முதலில் நடிக்கவிருந்த நடிகர்கள் குறித்த தகவல் கிடைத்துள்ளது. ஆம் இந்த படத்தின் கதையை இயக்குனர் லிங்குசாமி முதலில் சூர்யாவிடம் கூறியுள்ளார். ஆனால் சூர்யா வேறொரு திரைப்படத்தில் கமிட் ஆகியிருந்த காரணத்தால் அவரால் நடிக்கமுடியவில்லை. அதற்கு பிறகு விஜய்யிடம் இந்த கதையை கூறியவுடன் அவரும் வேறொரு படத்தில் கமிட் ஆகியிருந்த காரணத்தால் அவராலும் நடிக்கமுடியவில்லை. அதற்கு பிறகு விஷாலிடம் கதை கூறியவுடன் அவருக்கு பிடித்துபோகிவிட்டதாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்