மங்காத்தா படத்தில் அர்ஜுனுக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தவர் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியான திரைப்படம் மங்காத்தா. இது, தல அஜித்தின் 50-வது படமாகும். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது .
இந்த படத்தில் அர்ஜூன்,திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். அதிலும் தல அஜித் இந்த படத்தில் வில்லனாக நடித்து அசத்தி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த பாராட்டுகளைப் பெற்றார். அதன் வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் மங்காத்தா 2 எப்போது என்று கேட்டு வருகின்றனர்.
நேற்றுடன் படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனை அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் கொண்டாடி தீர்த்தனர். இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், அர்ஜுன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
அதாவது, இந்த படத்தில் அர்ஜுன் நடித்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது, தெலுங்கு முன்னணி நடிகரான நாகார்ஜுனா தானாம். கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால், இப்படத்தில் நடிகர் நாகார்ஜுனாவால் நடிக்கமுடியாமல் போனதாக கூறப்படுகிறது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…