வெங்கட் பிரபுவின் அடுத்த திரைப்படம் யாருடன் தெரியுமா.?

Published by
பால முருகன்

இயக்குனர் வெங்கட் பிரபுவின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில், சென்னை 28 இயக்கியதன்  மூலம் அறிமுகமானவர் வெங்கட் பிரபு. அதனை தொடர்ந்து சரோஜா, கோவாம் போன்ற படங்களை இயக்கியனார். அடுத்ததாக அஜித்தை வைத்து மங்காத்தா என்ற மிரட்டலான படத்தை கொடுத்து ரசிகர்களுக்கு மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார். கடைசியாக லைவ் டெலிகாஸ் என்ற வெப் தொடரை இயக்கியிருந்தார்.

இதுவும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தற்போது நடிகர் சிம்புவை வைத்து மாநாடு என்ற படத்தை இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மாநாடு படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு எந்த நடிகரை வைத்து படம் இயக்க போகிறார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், வெங்கட் பிரபு அடுத்ததாக பிரபல கன்னட நடிகர் சுதீப் நாயகனாக வைத்து ஒரு புதிய திரைப்படம் இயக்கவுள்ளதாகவும் அது, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராக உள்ளதாவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் அல்லது தமன் இருவரில் ஒருவர் இசையமைப்பாளராக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 மேலும், நடிகர் சுதீப் தமிழில் நான் ஈ, மற்றும் விஜய் நடிப்பில் வெளியான புலி படத்தில் அவருக்கு வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

பஞ்சாப்பை சல்லி சல்லியாக நொறுக்கிய அபிஷேக் சர்மா! ஹைதராபாத் மிரட்டல் வெற்றி!

ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…

19 minutes ago

பாமக தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன்! அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

சென்னை :  கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…

1 hour ago

குட் பேட் அக்லி மெகா ஹிட்! ‘KGF’ யுனிவர்ஸில் இணையும் ரெட் டிராகன் அஜித்?

சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…

1 hour ago

அதிரி புதிரி அடி…ஷ்ரேயாஸ் சரவெடி! ஹைதராபாத்துக்கு பஞ்சாப் வைத்த பிரமாண்ட டார்கெட்!

ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில்…

2 hours ago

ஸ்டேட்டஸ் போட முடியல…திடீரென முடங்கிய வாட்ஸ்அப்! டென்ஷனான பயனர்கள்!

டெல்லி : உலகம் முழுவதும் உள்ள பல வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் சேவை தடைபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, சிலருக்கு…

3 hours ago

ரூ.27 கோடி வேலை செய்யல…ரிஷப் பண்டை கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…

4 hours ago