சுந்தரா டிராவல்ஸ் 2..? ஹீரோக்கள் யார் யார் தெரியுமா..?
தாகா இயக்கத்தில் வெளியான சுந்தரா டிராவல்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் தாகா இயக்கத்தில் நடிகர் முரளி மற்றும் வடிவேலு நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ். இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்தை தயாரிப்பாளர் தங்கராஜ் தயாரிந்திருந்தார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் பரணி இசையமை த்திருந்தார். ராதா, வினு சக்ரவர்த்தி, மணிவண்ணன் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில், பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. இந்த நிலையில், தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவகவுள்ளதாகவும், இதில், முரளி நடித்த கதாபாத்திரத்தில் கருணாகரனும், வடிவேலு நடித்த கதாபாத்திரத்தில் யோகி பாபுவும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.