உங்களுக்கு பிடித்த நடிகர் யார்.? சிம்ரன் பதில்.!

ஜினிகாந்த் சார் தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று நடிகை சிம்ரன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான VIP படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சிம்ரன். இந்த படத்தை தொடர்ந்து ஒன்ஸ்மோர், அவள் வருவாளா, துள்ளாத மனமும் துள்ளும், வாலி, பிரியமானவளே போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். இவருக்கென்று அப்போதிலிருந்து இப்போது வரை ரசிகர்கள் பட்டாளம் மிகவும் அதிகமாகவுள்ளது.
தற்போது அந்தகன் மற்றும் சியான் 60, சர்தார் ஆகிய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நடிகை சிம்ரன் பதிலளித்து வந்தார்.
அப்போது ரசிகர் ஒருவர் தமிழ் சினிமாவில் உங்களுக்கு எப்போதும் பிடித்த நடிகர் யார் என்று கேட்டதற்கு, சிம்ரன் ” மிஸ்டர் ரஜினிகாந்த் சார் தான் எனக்கு மிகவும் பிடிக்கும்” என்று கூறியுள்ளார். ரஜினியுடன் நடிகை சிம்ரன் பேட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.