மெக்சிகோவை தாயகமாக கொண்ட பப்பாளிப்பழம் பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்த ஒரு பழம் தான். பப்பாளி பழம் சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளது. வயிறு முதல் உள்ளுறுப்புகள் வரை பல நன்மைகளை கொடுக்கக்கூடியது. அவை நாம் அறிந்தது தான். அதே சமயம் பப்பாளி பழம் சாப்பிடுவதால் சில தீமைகளும் உள்ளது.
பப்பாளிப்பழம் யார் சாப்பிட வேண்டும், யார் சாப்பிடக்கூடாது என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா? இன்று பப்பாளி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்தும், யாரெல்லாம் பப்பாளிப் பழம் சாப்பிடக் கூடாது என்பது குறித்தும் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
பப்பாளி பழத்தை சாதாரணமாகவோ அல்லது பப்பாளிக்காயை சமைத்தோ கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடக்கூடாது. பெரும்பாலும் இது அனைவரும் அறிந்தது தான். ஏனென்றால் பப்பாளி உடலுக்கு வெப்ப தன்மையை கொடுக்கக்கூடியது. எனவே கர்ப்பிணிப் பெண்கள் தொடக்க காலகட்டத்தில் பப்பாளி பழத்தை சாப்பிடும் பொழுது வயிற்றில் உள்ள கருவிற்கு இது தீங்கு விளைவிக்கும். மேலும் இதன் காரணமாக கருச்சிதைவு ஏற்படும் அபாயமும் உள்ளது.
பப்பாளியில் பாப்பெயின் மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை அதிக அளவில் உள்ளது. எனவே மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் பப்பாளி சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். இந்த பாப்பெயின் மற்றும் பீட்டா கரோட்டின் காரணமாக மஞ்சள் காமாலை அதிகரிக்கும். எனவே, மஞ்சள் காமாலை உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை அடிப்படையில் பப்பாளியை எடுத்து கொள்ளலாம்.
சிலருக்கு இரத்தத்தின் அடர்த்தி இயல்பை விட அதிகமானதாக இருக்கும், அவர்களுக்கு ரத்த ஓட்டமும் குறைவாக இருக்கும். அவ்வாறு இரத்த அடர்த்தி அதிகமாக உள்ளவர்கள், மருந்து எடுத்துக் கொள்வது வழக்கம் தான். எனவே, மருந்து எடுத்துக் கொள்பவர்கள் பப்பாளி பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் அல்லது மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பின் பப்பாளி பழம் சாப்பிட வேண்டும்.
பப்பாளி இரத்த சர்க்கரை அளவை குறைக்கக் கூடிய ஒரு பழம். எனவே குறைந்த சர்க்கரை பாதிப்பு உள்ளவர்கள் பப்பாளியை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
இதயம் சம்பந்தமான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் பப்பாளி அதிகமாக உட்கொள்ளக் கூடாது. பப்பாளி பழத்தை அதிகமாக உட்கொள்வதால் குறைந்த இதயத் துடிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே மருத்துவரின் ஆலோசனையின் அடிப்படையில் இதய பிரச்சினைகள் இருப்பவர்கள் பப்பாளியை உட்கொள்வது நல்லது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…