மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் மாஸ்டர் தாஸ்…இயக்குனர் யார் தெரியுமா..?
நடிகர் அர்ஜுன் தாஸ் அடுத்ததாக இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஹீரோவாக புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் வசந்தபாலன். இவர் வெளியில், காவிய தலைவன், அங்காடி தெரு போன்ற திரைப்படங்களை இயக்கியவர். இவர் நேற்று தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது பள்ளிக்கால நண்பர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதாகவும் இது இவரது 25 வருட கனவு எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது இதனை தொடர்ந்து இந்த தயாரிப்பு நிறுவனம் புதிய திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் அந்த படத்தை அவரே இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தில் நடிகராக கைதி, மாஸ்டர், அந்தகாரம் போன்ற படங்களில் வில்லனாக அர்ஜுன் தாஸ் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த படத்திற்கான மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர் அர்ஜுன் தாஸ் அந்தகாரம் படத்தில் ஹீரோவாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாயகன் pic.twitter.com/h49MwBw9jp
— Vasantabalan (@Vasantabalan1) February 12, 2021