வேதாளம் தெலுங்கு ரீமேக்.! இசையமைப்பாளர் யார் தெரியுமா..?

Default Image

வேதாளம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் – க்கு பிரபல தெலுங்கு இசையமைப்பாளரான மணிஷர்மா வின் மகனான சாகர் மஹதி இசையமைக்கவுள்ளதாக தகவல். 

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வேதாளம். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், லெட்சுமி மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்ப்பை பெற்று இந்த திரைப்படம் நல்ல வசூல் சாதனை செய்தது.

தற்போது இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை அஜித்தின் பில்லா படத்தின் ரீமேக்கை இயக்கிய மெஹர் ரமேஷ் இயக்குவதாக கூறப்படுகிறது. இந்த தெலுங்கு ரீ மேக்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் படி, இந்த வேதாளம் தெலுங்கு ரீமேக் – க்கு பிரபல தெலுங்கு இசையமைப்பாளரான மணிஷர்மா வின் மகனான சாகர் மஹதி இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்