கீர்த்தி சுரேஷிற்கு பிடித்த ஹீரோ யார் தெரியுமா..?
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பிடித்த ஹீரோ விஜய் என்று சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.தற்போது இவர் பொன்னியின் செல்வன்,அண்ணாத்த,சாணிக் காயிதம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.அது மட்டுமின்றி 4 தெலுங்கு படங்களிலும் ,2 மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் இவரிடம் உங்களுக்கு அஜித், விஜய், தனுஷ், சிவகார்த்தியேன் இதில் உங்களிற்கு பிடித்த ஹீரோ யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது அதற்க்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ் எனக்கு விஜய் சார் தான் ரொம்ப பிடிக்கும் என்று கூறியுள்ளார். ஏற்கனவே பைரவா மற்றும் சர்கார் போன்ற படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ் திரும்பவும் விஜய்யுடன் எப்போது நடிக்கபோகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.