தல அஜித்தின் அடுத்த படத்தை பில்லா பட இயக்குநரான விஷ்ணுவர்தன் இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில், தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார்.கடந்தாண்டு இவரது நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர் கொண்ட பார்வை ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் சாதனையும் படைத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். மேலும் அஜித் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் . மேலும் ஹேமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை நடத்த அனுமதி வழங்கியதை அடுத்து, அஜித் அவர்கள் பலரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் பணிகளை ஆரம்பிக்கலாம் என்று கூறியதாக தயாரிப்பாளர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் அடுத்த விஷயம் அஜித்தின் 61வது படத்தை குறித்த தகவல்கள் தான். சமீபத்தில் கூட தலயின் அடுத்த படத்தை கோகுலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பதாகவும், சுதா கே பிரசாத் இயக்க போவதாகவும் தகவல் வெளியானது. அது மட்டுமின்றி கார்த்திக் நரேன், வெங்கட் பிரபு, சிவா உள்ளிட்ட இயக்குநர்களின் பெயர்கள் அடிப்பட்டது. தற்போது தல 61 படத்தை குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது . அதாவது தல அஜித் அவர்களின் அடுத்த படத்தை பில்லா மற்றும் ஆரம்பம் உள்ளிட்ட படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஷ்ணுவர்தன் ஏற்கனவே அஜித் அவர்களிடம் கதை கூறியதாகவும், அவரும் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே விஷ்ணுவர்தன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், தன்னிடம் ராஜேந்திர சோழனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட ஸ்கிரிப்ட் ஒன்றை ரெடி செய்து வைத்திருப்பதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதன் உண்மை என்ன என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…