பிரமாண்டமாக தொடங்கப்பட்டுள்ள பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு வருடமாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த வருடத்திற்கான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று பிரமாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியையும் வழக்கம் போல நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்குகிறார்கள்.
கடந்த வருடம் போல் அல்லாமல் இந்த வருடம் 18 போட்டியாளர்கள் களமிறக்கப்படுகிறார்கள். அந்த வகையில் முதலாவதாக கானா பாடகி இசை வாணியும், இரண்டாவது போட்டியாளராக சீரியல் நடிகர் ராஜுவும், மூன்றாவதாக மாடல் மதுமிதாவும், நான்காவதாக தொகுப்பாளர் அபிஷேக்கும் களமிறக்கப்பட்டுள்ளார்கள்.
ஐந்தாவது போட்டியாளராக மாடலும், நடிகையுமாகிய திருநங்கை நமீதா அவர்களும், ஆறாவது போட்டியாளராக பிரபல தொகுப்பாளினி பிரியங்கா அவர்களும், ஏழாவது போட்டியாளராக ஜெமினி கணேசனின் பேரன் அபினை அவர்களும், எட்டாவது போட்டியாளராக நடிகை பவானி ரெட்டி அவர்களும், ஒன்பதாவது போட்டியாளராக நாட்டுப்புற கலைஞர் சின்ன பொண்ணு அவர்களும், பத்தாவது போட்டியாளராக மாடல் அழகி நதியா அவர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பதினோராவது போட்டியாளராக நடிகர் வருண், 12 வது போட்டியாளராக தொகுப்பாளரும் நகைச்சுவை நடிகருமாகிய இமான் அண்ணாச்சியும், 13 வது போட்டியாளராக மாடல் ஸ்ருதியும், 14 வது போட்டியாளராக மாடல் அழகி அக்ஷராவும், 15 வது போட்டியாளராக ராப் இசை பாடகி ஐக்கி பெர்ரியும், 16 வது போட்டியாளராக நாடக கலைஞர் தமிழ் செல்வியும், 17வது போட்டியாளராக மாஸ்டர் படத்தில் விஜயின் மாணவராக நடித்த சிபி சந்திரனும், 18வது போட்டியாளராக நடிகர் நிரூப் நந்தகுமார் அவர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…
டெல்லி : அதிவேக இன்டர்நெட், நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரையில் தடையில்லா இணைய சேவை உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்திய …
துபாய் : இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் வரவேற்பை பெற்றி சொல்லியே தெரியவேண்டாம். அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் விராட்…
சென்னை : சமூக வலைத்தளங்களில் மாளவிகா மோகனன் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டாலே போதும் லைக்குகளும், கமெண்டுகளும் மலைச்சாரல் போல…
சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…