வலிமை ஃபர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகிறது தெரியுமா..??

Default Image

அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வருகின்ற ஜூலை 15- ஆம் தேதி வெளியீடவுள்ளதாக தகவல்

நடிகர் அஜித்குமார் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷி நடித்து வருகிறார். போனிகபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தில் கார்த்திகேயா, அச்சியுத் குமார், யோகி பாபு, சுமித்ரா, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சென்னையில் இருப்பதால் வலிமை படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறைத்த அறிவிப்பை வெளியீடுவார் என்று அஜித் ரசிகர்கள் காத்துள்ளனர். இதனையடுத்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வருகின்ற ஜூலை 15- ஆம் தேதி வெளியீடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்