வலிமை படம் எப்போது வெளியாகிறது தெரியுமா..?
அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆவாது உறுதியாகியுள்ளது.
நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது வலிமை படத்தின் டப்பிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், கிளைமாக்ஸ் காட்சிக்காக விரைவில் தல அஜித் வெளிநாடு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.மேலும் படத்தின் மோஷன் போஸ்டர் ரெடியாகி விட்டதாகவும் கூறப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் டைட்டிலை தவிர இதுவரை வலிமை படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாத காரணத்தால் தல ரசிகர்கள் அப்டேட் எப்போது என்று கேட்டு வருகின்றனர்.விரைவில் வலிமை அப்டேட் வெளிவரும் என்று காத்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு தல அஜித்தின் புகைப்படங்களும் ,வலிமை ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் தான் மகிழ்ச்சியை அளிக்கிறது.
இந்த நிலையில் தற்போது தல ரசிகர்களுக்கு வலிமை படத்திலிருந்து புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது, ஆம் வலிமை படத்தை வருகின்ற ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்வது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.