கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
கோவையில், ஏப்ரல் 26 மற்றும் 27ம் தேதிகளில், த.வெ.க.வின் பூத் கமிட்டி முதல் மண்டல மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை : கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கம் ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்கள் சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாநாடு 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தவெகவின் தேர்தல் பணிகளை வலுப்படுத்துவதற்காக, தமிழ்நாட்டின் ஐந்து மண்டலங்களில் (வடக்கு, தெற்கு, மேற்கு, டெல்டா, மத்திய) நடத்த திட்டமிடப்பட்ட முதல் பூத் கமிட்டி மாநாடாகும்.
ததவெக தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு செயலாளர் என்ற அடிப்படையில் 70,000 பூத் கமிட்டி செயலாளர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளார். இந்தப் பணி பிப்ரவரி 2025 இறுதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 11ம் தேதி, சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில், விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிப்பது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடந்தன. ஏப்ரல் மாத இறுதியில் தவெக சார்பில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இடம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
ஒவ்வொரு ஊராட்சிக்கும் தலைவர், கிளை செயலாளர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர். தவெக, கிராமப்புறங்களில் கூட பூத் கமிட்டிகளை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கட்சியின் செல்வாக்கை அனைத்து தளங்களிலும் விரிவாக்குவது இலக்காக உள்ளது.