சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படத்தின் டிரைலர் வருகின்ற மே மாதம் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் .
இந்த படத்திற்கான டீசர் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று முதல் படத்திற்கான கடைசி கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பவுள்ளதாகவும், இன்னும் 6 நாட்களில் படத்திற்கான மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த மாநாடு திரைப்படம் மே மாதம் ரம்ஜான் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்திற்கான படப்பிடிப்பு முடிந்து மற்ற வேலைகளை முடிக்க சில நாட்கள் ஆகும் என்பதால் படத்தை மே மாதம் இறுதியில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த படத்திற்கான டிரைலர் எப்போது வெளியாகிறது என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஆம் இந்த படத்திற்கான டிரைலர் வருகின்ற மே 13 ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குவஹாத்தி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற…
சென்னை : தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரமலான் பண்டிகை உற்சாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று பிறை தெரிந்த நிலையில், இன்று ரமலான்…
சென்னை : தமிழ் சினிமா மட்டுமின்றி இப்போது இந்திய சினிமா வரை அனைவருடைய கவனம் முழுவதும் அஜித் நடிப்பில் உருவாகி வரும்…
குவஹாத்தி : நேற்று (மார்ச் 30)நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை…
பாங்காக் : மியான்மரில் மார்ச் 28, 2025 அன்று பிற்பகல் 12:50 மணியளவில் (மியான்மர் நேரம், MMT) 7.7 ரிக்டர்…
சென்னை : தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் பணியாற்றிய…