வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா..?
சூர்யாவின் வாடிவாசல் படத்தில் நடிகை ஆண்ட்ரியா இணைந்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் சூர்யா அவர்கள் தற்போது சூரரை போற்று படத்தில் நடித்து முடித்ததை அடுத்து அருவா படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
இதில் வாடிவாசல் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார். வாடிவாசல் திரைப்படம் ஜல்லிக்கட்டு கதைகளத்தை கொண்டதாகவும், ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரராக சூர்யா நடிப்பதாகவும் அண்மையில் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் மூலம் உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில் தற்பொழுது வாடிவாசல் திரைப்படத்தின் அப்டேட் பற்றி தகவல் கிடைத்துள்ளது ஆம் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.