அஜித் நடிக்கவுள்ள “தல 61” படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதாகவும் தகவல்.
வலிமை :
இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார். படத்திற்கு இசையமையாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று யூடியூபில் 9 மில்லியனிற்கும் மேல் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இன்னும் ட்ரெண்டிங்கில் உள்ளது. வலிமை திரைப்படத்தில் முக்கிய சண்டைக்காட்சியை படமாக்க படக்குழு ஹைதராபாத் சென்றுள்ளார்கள். அங்கு 10 நாட்கள் படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
விரைவில் படத்திற்கான படப்பிடிப்பை முடித்துவிட்டு படத்தை வருகின்ற தீவாளி அன்று வெளியீட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கான டீசர் மற்றும் முதல் பாடல் குறித்த அப்டேட்டுகள் இன்னும் சில தினங்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தல 61 :
இந்த நிலையில், தற்போது தல அஜித்தின் 61-வது படத்தைப்பற்றி தகவல் கசிந்துள்ளது. அது என்னவென்றால், நேர்கொண்ட பார்வை, வலிமை, திரைப்படங்களை தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தையும் ஹெச்.வினோத் இயக்குவதாகவும், தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கவுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகி பரவி வருகிறது.
தல 61 படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை குறித்த அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வலிமை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கும்போது வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…