பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் எப்போது முடிவடைகிறது தெரியுமா.?

Default Image

பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை மார்ச் 5-ம் தேதியோடு முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம், அமிதாப் பச்சன், சரத்குமார், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, நடிகை கீர்த்தி சுரேஷ், நயன்தாரா,அனுஷ்கா ஷெட்டி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ரஹ்மான், ஜெயராம் போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.இதில் இந்த படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரம், வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி, ராஜராஜசோழன் கேரக்டரில் ஜெயம் ரவி, குந்தவை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ், நந்தினி கேரக்டரில் ஐஸ்வர்யா ராய், பெரிய பழுவேட்டரையர் கேரக்டரில் மோகன் பாபு நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பானது கடந்தாண்டு தாய்லாந்தில் வைத்து தொடங்கப்பட்டது.அதன் பின் கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்ட படத்தின் படப்பிடிப்பை ஜனவரியில் இருந்து ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து மீண்டும் தொடங்கப்பட்டது.அந்த படப்பிடிப்பில் கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ரஹ்மான், பார்த்திபன் உள்ளிட்ட ஒரு சில நடிகர், நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர் .ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 12 பாடல்களும் ரசிகர்களை தூண்டும் வகையில் உள்ளதாக படத்தின் நடன இயக்குனரான பிருந்தா கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டுள்ளார் மணிரத்னம்.அந்த வகையில் தற்போது வரை ஹைதராபாத்தில் 70% படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளது.காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை இடைவெளி இல்லாமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.மேலும் 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளது ஒருபுறம் இருக்க மறுபுறம் கிராபிக்ஸ் பணிகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பானது ஆந்திராவில் கோதாவரி நதிக்கரையில் எடுக்கப்பட உள்ளது.அதன் பின் மீண்டும் ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பானது மார்ச் 5-ம் தேதியோடு முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PM Modi - Manipur riot - Live
Natarajan - CSK
Kailash Gahlot
Seeman - DMK
edappadi - vijay
Ragging Death in Gujarat
Nayanthara Rakkayie