ஆர்யாவின் ‘சல்பேட்டா’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தெரியுமா.?
ஆர்யாவின் சல்பேட்டா படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் சென்னையில் வைத்து நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் ஆர்யா, அடுத்ததாக பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘சல்பேட்டா’ என்னும் படத்தில் நடிக்கவுள்ளார். பா. ரஞ்சித் அட்டகத்தி, மெட்ராஸ், காலா, கபாலி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர். இந்த படம் ஒரு வடக்கு சென்னை குத்து சண்டை வீரர்களை மையமாக கொண்டு உருவாகும் படமாகும். இதில் ஆர்யா குத்து சண்டை வீரராக களமிறங்குகிறார். அதற்காக ஆர்யா தனது உடலை ஃபிட்டாக மாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இந்த படத்தின் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா நடிக்கவுள்ளார். இதில் அவர் ஒரு தைரியமான வடக்கு சென்னை பெண்ணாக காட்சியளிக்கிறார். இவர் கடந்தாண்டு வெளியான “போதை ஏறி புத்தி மாறி” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். மேலும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் சென்னையில் வைத்து நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.