“அண்ணாத்த” படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா..?
ரஜினி நடிப்பில் உருவாகவுள்ள அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மார்ச் மாதம் 15 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. அதற்க்கு பிறகு பாதியில் படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது. அதன் பிறகு படத்திற்கான படப்பிடிப்பு எப்போது தொடங்கும் ஏன்னு எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், கடந்த மாதம் 25 ஆம் தேதி இந்த அண்ணாத்த திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது.
இந்த நிலையில் இதனை தொடர்ந்த தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்பு, வருகின்ற மார்ச் மாதம் 15 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு ஈவிபி பிலிம் சிட்டியில் வைத்து நடைபெறவுள்ளதாகவும் அடுத்ததாக அதன் பிறகு படப்பிடிப்பு கோவை மற்றும் பொல்லாச்சியைச் சுற்றி நடக்கும் என்று கூறப்படுகிறது.