மாஸ்டர் படம் எப்போது ரிலீஸ் தெரியுமா..?

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13ம் தேதி வெளியாகவுள்ளதாக சமூக வளைத்தளத்தில் செய்திகள் வைரலாகி வருகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் மாளவிகா மோகனன், சாந்தனு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
மேலும் படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. பல சாதனைகளும் படைத்தது வருகிறது. மேலும் மாஸ்டர் திரைப்படம் கடந்த மே மாதமே திரைக்கு வரவிருந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி சென்றது. அடுத்ததாக தீபாவளி தினத்தன்று வெளியாவதாக தகவல்கள் சமூக வளைத்தளத்தில் செய்திகள் வைரலானது.
ஆனால் படக்குழுவினர் தீபாவளி தினத்தன்று மாஸ்டர் படத்தின் டீசரை வெளியிட்டனர். அடுத்ததாக மாஸ்டர் திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தததாகவும் தகவல் வெளியான நிலையில், தற்போது மாஸ்டர் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13ம் தேதி வெளியாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் மாஸ்டர் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024