அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியீடு எப்போது தெரியுமா…?
அண்ணாத்த படத்தின் முதல் பாடல் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள புதிய படம் தான் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில், நடிகர் ரஜினியுடன் சேர்ந்து நயன்தாரா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், மீனா, சூரி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்துக்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இந்த படத்துக்கான முதல் பாடல் வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த படத்தின் முதல் பாடல் அக்டோபர் 4 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பாடல் மறைந்த பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.