சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவிருக்கும் டான் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 2-ம் வாரம் முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர் மற்றும் அயலான் . தற்போது இரண்டு படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நடந்து வருவதை தொடர்ந்து அவரது அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.அதாவது அட்லியின் உதவி இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் ‘டான்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகவும், அனிருத் இசையமைக்கவுள்ள இந்த படத்தினை சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
கல்லூரி பின்னணியில் உருவாகும் டான் படத்தில் நடிகரும், இயக்குனருமான எஸ்ஜே சூர்யா நடிக்க உள்ளதாகவும், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் பட நடிகையான பிரியங்கா அருள் மோகன் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது டான் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பானது பிப்ரவரி 2 வாரம் முதல் தொடங்கவுள்ளதாகவும்,அது கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் வைத்து 30 நாட்கள் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொல்கத்தா : 18 வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. …
சென்னை : இன்று அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர்…
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி…
சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச்…
சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை…