சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள ‘டான்’ திரைப்படம் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி ஆயுத பூஜைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர் மற்றும் அயலான் . இதில் நேற்று டாக்டர் திரைப்படம் மார்ச் மாதம் 26 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தனர். அயலான் திரைப்படம் வருகின்ற கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் அட்லியின் உதவி இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் ‘டான்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்திற்கும் அனிருத் இசையமைப்பதாகவும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதற்கான ஒரு வீடியோவும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்ப்பு கிடைத்தது.
கல்லூரி பின்னணியில் உருவாகும் டான் படத்தில் நடிகரும், இயக்குனருமான எஸ்ஜே சூர்யா மற்றும் நடிகை பிரியங்கா அருள் மோகன், நடிகர் சூரி, நடிகர் சமுத்திரக்கனி, ஆகியோர் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கான படப்பிடிப்பை வருகின்ற மார்ச் மாதத்திலிருந்து தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், தற்போது இந்த திரைப்படத்திற்கான ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. அது என்னவென்றால் இந்த திரைப்படத்தை இந்த வருடம் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி ஆயுத பூஜைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதைபோல் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படம் கிருஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…
சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…
சென்னை : தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். வயது மூப்பு காரணமாக…
டொமிங்கோ : டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள ஒரு பிரபலமான ஜெட் செட் இரவு விடுதியின் கூரை…