சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் எப்பொழுது ரிலீஸ் தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்திற்கான படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், இந்த படம் தமிழ் புத்தாண்டில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் நெல்சன் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து உருவாகியுள்ள புதிய தமிழ் திரைப்படம் தான் டாக்டர் இந்த படத்தில் கதா நாயகியாக பிரியங்கா அருள்மோகன் அவர்கள் நடித்துள்ளார். மேலும் பல விஜய் டிவி பிரபலங்களும் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில், அடுத்ததாக இயக்குனர் நெல்சன் விஜய்யின் படத்தை இயக்க இருப்பதால் வேகமாக டாக்டர் படத்தை ரிலீஸ் செய்வது குறித்து திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் வருகிற தமிழ் புத்தாண்டு அன்று இந்த படம் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!
March 16, 2025
சுனிதா – வில்மோரை மீட்கும் பணி வெற்றி.! பூமிக்கு திரும்பும்போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்?
March 16, 2025