சாணி காயிதம் படம் எப்போது ரிலீஸ் தெரியுமா.?

இயக்குனர் அருண் மாதேஷ் வரண் ராக்கி திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சாணிக்காயிதம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் செல்வராகவன் – கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
கடந்த ஆண்டே இந்தப்படம் நேரடியாக அமேசான் பிரேமில் வெளியாகும் என தேதி அறிவிக்கப்படாமல் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது சாணி காயிதம் படம் வெளியாகும் தேதி குறித்த தகவல் கிடைத்துள்ளது அதன்படி, இப்படம் வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
செல்வராகவன் இயக்கும் திரைப்படமே ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பதாலும், இது அவர் நடித்த முதல் திரைப்படம் என்பதாலும், கண்டிப்பாக கதை அருமையாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் படத்தை பார்க்க மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
சிக்ஸர் விளாசிய சால்ட்…ஸ்டிக்கை தெறிக்கவிட்ட சிராஜ்..பெங்களூருக்கு எமனாக மாறிய தருணம்!
April 3, 2025