ராஜமவுலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள RRR எனும் படம் அக்டோபர் 13ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இயக்குனர் ராஜமவுலியின் இயக்கத்தில் உருவாகி வெளியாகி வெற்றி பெற்ற பாகுபலி படத்தைத் தொடர்ந்து, தற்போது தெலுங்கு முன்னணி கதாநாயகனாக ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரையும் வைத்து ரத்தம் ரணம் ரௌத்திரம் அதாவது RRR என்ற படத்தை ராஜமவுலி இயக்கி வருகிறார். டிவிவி தானைய்யா அவர்களின் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஆலியாபட் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
சுதந்திரப் போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கான ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அக்டோபர் 13ஆம் தேதி தசரா பண்டிகையை ஒட்டி இப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…