பத்து தல படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா.?

சிம்பு நடிப்பில் அடுத்ததாக வெந்து தணிந்தது காடு படம் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை தொடர்ந்து சிம்பு இயக்குனர் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகவுள்ள பத்து தல படத்தில் நடிக்கவுள்ளார். கெளதம் கார்த்தி, பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
இந்நிலையில் , இப்படத்திற்கான படப்பிடிப்பு வரும் மே 26-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மே மாதம் தொடங்கி ஜூன் மாதம் இறுதியில் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளாராம். ஏற்கனவே கெளதம் கார்த்தி , பிரியா பவானி சங்கர் ஆகியோரின் காட்சிகள் பாதி படமாக்கப்பட்டுள்ள நிலையில், சிம்பு காட்சிகள் மட்டும் 1 மாதம் படமாக்கப்படவுள்ளதாம்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் 4 பாடல்கள் உள்ளதாம். அந்த 4 பாடல்களையும்ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து கொடுத்துவிட்டாராம். விரைவில் படத்தின் பின்னணி இசையப்பணியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.