மாதவனின் ‘ராக்கெட்ரி’ எப்போது வெளியாகிறது தெரியுமா.?
மாதவனின் ராக்கெட்ரி படத்தினை ஏப்ரல் 30-ம் தேதி அனைத்து மொழிகளிலும் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாதவன் . ரசிகர்களால் மேடி என்று அன்புடன் அழைக்கப்படும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ,இந்தி , ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தார் . சமீபத்தில் இவரது நடிப்பில் நிசப்தம் மற்றும் மாறா ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இவர் ராக்கெட்ரி எனும் படத்தினை இயக்கி நடித்து வருகிறார்.சிம்ரன் ஜோடியாக நடிக்கும் இந்தப் படமானது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாம்.உளவாளியாகக் இருந்து கைது செய்யப்பட்டு பின்னர் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்ட நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு தான் ‘ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட்’.இந்த படத்தின் தமிழ் பதிப்பில் பத்திரிகையாளராக சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதாகவும்,அதே சமயம் இந்தி பதிப்பில் அந்த வேடத்தில் ஷாருக்கான் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.
மாதவன் இயக்கி நடித்துள்ள இந்த படத்தினை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் தற்போது ராக்கெட்ரி படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது மாதவனின் ராக்கெட்ரி படத்தினை ஏப்ரல் 30-ம் தேதி அனைத்து மொழிகளிலும் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் இந்த படத்தின் தமிழக உரிமையை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் வாங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.