சூர்யா 40 படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகிறது தெரியுமா..??
சூர்யா 40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியீடவுள்ளதாக தகவல்.
நடிகர் சூர்யா அடுத்தாக தனது 40 வது திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துவருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இதனை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவலை என்னவென்றால் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியீடவு ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்து படக்குழு எந்த அறிவிப்பு வெளியீடவில்லை.