நீண்ட நாட்களுக்கு உருளைக்கிழங்கு ஃபிரெஷாக இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா…?

Default Image

அனைவரது சமையல் அறையிலுமே காய்கறிகள் ஒரு இன்றியமையாத ஒன்று தான். அதிலும் உருளைக்கிழங்கு சுலபமாக சமைக்கக்கூடியது மட்டுமல்லாமல், அதிக அளவு சத்துக்கள் கொண்டது. எனவே அனைவர் வீட்டிலுமே உருளைக்கிழங்கு சமையலறையில் முக்கியமான ஒரு பொருளாக இருக்கும்.

இந்த உருளை கிழங்கு விரைவில் கெட்டுவிடாமல் இருப்பதற்காக பலரும் பல வழிகளை உபயோகிக்கிறார்கள், இருப்பினும் கெட்டு விடுகிறது. உருளைக்கிழங்கு விரைவில் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? எப்படி உருளைக்கிழங்கை சேமிக்க வேண்டும்? கடையில் உருளைக்கிழங்கை வாங்கும் பொழுது எப்படி தரம் பார்த்து வாங்க வேண்டும்? என்பது குறித்த சில உதவிக்குறிப்புகளை இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

வண்ண உருளைக்கிழங்குகள்

உருளைக்கிழங்கு என்றாலே நமக்கு வெண்மை நிற உருளைக்கிழங்குகள் தான் நினைவுக்கு வரும். ஆனால் உருளைக் கிழங்குகளில் நீல உருளைக்கிழங்கு, ஊதா உருளைக்கிழங்கு, சிவப்பு உருளைக்கிழங்கு, பச்சை உருளைக் கிழங்கு என பல வண்ணங்களில் உருளைக்கிழங்கு உள்ளது.

potato

இருப்பினும் பச்சை நிற உருளைக்கிழங்குகள் மட்டும் உண்ண வேண்டாம் என கூறப்படுகிறது. ஆனால் மற்ற வண்ண உருளைக் கிழங்குகள் அனைத்தும் உண்ணத் தகுந்த உருளைக்கிழங்குகள் தான். மேலும் வெள்ளை உருளை கிழங்குகளை விட வண்ண உருளைக் கிழங்கில் ஆக்ஸிஜனேற்றம் அதிகம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

குளிர்ந்த பகுதி

உருளைக்கிழங்கு கெட்டுப்போகாமல் நீண்ட நாட்கள் இருப்பதற்கு குளிர்ந்த இடங்களில் வைக்க வேண்டியதும் அவசியம். உருளைக்கிழங்கை 43-50 ° F குளிர்ந்த நிலையில் சேமித்து வைக்க வேண்டும். இவ்வாறு குளிர்ந்த நிலையில் வைக்கக்கூடிய உருளைக் கிழங்குகளில் தான் வைட்டமின் சி பாதுகாக்கப்பட்டிருக்கும். மேலும் குளிர்ந்த இடங்களில் வைக்கப்படும் உருளைக்கிழங்கில் நான்கு மாதங்களுக்கு வைட்டமின் சி 90% பராமரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

potato

மேலும் வெப்பநிலை அதிகமான சூடான பகுதிகளில் சேமிக்கப்பட்டிருக்கும் உருளைக்கிழங்கில் கிட்டத்தட்ட 20% வைட்டமின் சி இலக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே வெப்பநிலை குறைவாக குளிர்ந்த நிலையில் உள்ள இடத்தில் உருளைக்கிழங்கை சேமிப்பது உருளைக்கிழங்கு ஃபிரெஷாக இருப்பதற்கு ஒரு முக்கிய வழியாகும்.

ஒளியில்லாத பகுதி

உருளைக் கிழங்குகளை சூரிய ஒளி அல்லது அதிக ஒளி கொண்ட விளக்குகள் உள்ள பகுதியில் வைக்கக்கூடாது. அவ்வாறு சூரிய ஒளி படக்கூடிய உருளைக்கிழங்கு பச்சை நிறத்தில் மாறும். சூரிய ஒளி படும் பொழுது உருளைக்கிழங்கின் தோல் சோலனைன் எனும் ரசாயனத்தை உற்பத்தி செய்யும். இந்த ரசாயனம் அதிகரிப்பதன் காரணமாக தான் பச்சை நிற தோல் கொண்ட உருளைக்கிழங்கு உருவாகிறது.

potato 1

ஆனால் பலர் இந்த உருளைக்கிழங்கை வாங்க மாட்டார்கள். ஏனென்றால் இந்த பச்சை நிறத்தில் மாறிய உருளைக்கிழங்கில் கசப்பு சுவை இருக்கும் எனவே உருளைக்கிழங்கை வீட்டில் வைக்கும் பொழுது அதிக ஒளி இல்லாத, இருட்டான பகுதிகளில் வைப்பது மிகவும் நல்லது.

திறந்த வெளி அல்லது காகித பை

உருளைக்கிழங்குகளை திறந்த கிண்ணம் அல்லது காகித பைகளில் போட்டு வைக்கலாம். அப்படி இல்லாமல் கண்ணாடி டப்பாக்கள் அல்லது பிளாஸ்டிக் பைகளில் போட்டு வைக்கும் பொழுது உருளைக்கிழங்குகளின் ஈரப்பதம் அதற்குள்ளேயே சேகரிக்கப்பட்டு பாக்டீரியாவை உருவாக்கும். இதன் காரணமாக உருளைக்கிழங்கின் தோல்கள் அழுகி, விரைவில் கெட்டுவிடும்.

potato 1

எனவே உருளைக்கிழங்குகளை வாங்கி வந்ததும் அதன் மேல் உள்ள அழுக்குகளை துணி வைத்து துடைத்து எடுத்துவிட்டு, அவற்றை உலர வைத்து காற்று படும்படியான பகுதிகளில் வைக்க வேண்டும். இவ்வாறு வைக்கும் பொழுது பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் வளர்வது தடுக்கப்படுவதுடன் உருளைக்கிழங்கு நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்கும் உதவுகிறது.

தனிமை படுத்துதல்

உருளைக்கிழங்கை பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து வைக்ககூடாது. குறிப்பாக வாழைப்பழம், ஆப்பிள், வெங்காயம் மற்றும் தக்காளி போன்ற பழங்கள் அதிக அளவிலான எத்தனாலை வெளியிடும். எனவே உருளைக்கிழங்கு விரைவில் முளைத்து அதன் ஃபிரெஷான தன்மையை இழந்து விடும்.

potato

உருளைக்கிழங்கு வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை

கடைகளில் நாம் உருளைக்கிழங்கு வாங்கும் பொழுது உருளைக்கிழங்கு பிரஷ்ஷாக உள்ளதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும். அதற்கான சில குறிப்புகளை அறிந்து கொள்வோம்.

மென்மையான தோல் : உருளைக்கிழங்குகளை வாங்கும் பொழுது மென்மையான தோல் கொண்ட கிழங்குகளை வாங்க வேண்டாம். பார்ப்பதற்கு பிரஷ்ஷாக கெட்டியாக உள்ள உருளைக்கிழங்குகளை வாங்குங்கள்.

வெட்டுக்காயங்கள்: உருளைக்கிழங்கு பிற இடங்களில் வரும் பொழுது சேதமடைந்து இருக்கும். எனவே கிழங்கில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டிருந்தால் அந்த உருளைக்கிழங்குகளை நாம் கடைகளில் வாங்கும் பொழுது தேர்ந்தெடுக்கக் கூடாது. ஏனென்றால் இவை விரைவில் கெட்டுவிடும்.

முளைத்த கிழங்குகள் : உருளைக்கிழங்குகள் வாங்கும் பொழுது பச்சை நிறத்தில் ஆங்காங்கு மூளை இருக்குமானால் அந்த உருளைக்கிழங்குகளை வாங்க வேண்டாம். ஏனென்றால் இந்த உருளைக்கிழங்கு சுவையும் நன்றாக இருக்காது, அதே சமயத்தில் இந்த உருளைக்கிழங்கு முளை இருப்பதன் காரணமாக விரைவில் கெட்டித் தன்மையை இழந்து மென்மையாக மாறிவிடும்.

ஒரு சாதாரண உருளைக்கிழங்கு தானே அதற்கு இவ்வளவு கட்டுப்பாடா என நினைக்க வேண்டாம். ஒவ்வொரு முறையும் கடையில் பணம் கொடுத்து வாங்குகிறோம். எனவே இனி கிழங்கு வாங்கும் பொழுது இந்த அனைத்து குறிப்புகளையும் நீங்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்