ஹிப் ஹாப் ஆதி இரண்டாவதாக இயக்கி நடிக்கும் படத்திற்கு ‘சிவகுமாரின் சபதம்’ என்று டைட்டில் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இசையமைப்பாளராகவும் ,நடிகராகவும் வலம் வரும் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் நான் சிரித்தால் . ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் ஆதி .இதனை அஸ்வின் ராம் இயக்குகிறார்.
இதனை தொடர்ந்து அவர் அதே சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் மற்றொரு படத்திலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட உள்ள இந்த படத்தினை ஹிப் ஹாப் ஆதியே இயக்கி நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர் ஏற்கனவே மீசையை முறுக்கு படத்தை இயக்கி நடித்ததும்,அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டடித்ததும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் ஹிப் ஹாப் ஆதி இரண்டாவதாக இயக்கி நடிக்கும் திரைப்படத்திற்கு ‘சிவகுமாரின் சபதம்’ என்று டைட்டில் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மார்ச் மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ள இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…