தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் சங்கர் அடிக்கடி நல்ல படங்களை பார்த்துவிட்டு படக்குழுவை அழைத்து அல்லது சமூக வலைதளங்களில் மூலம் பாராட்டி விடுவார். அந்த வகையில், சமீபத்தில் வெளியான விக்ரம், மாமனிதன் உள்ளிட்ட படங்களை பார்த்துவிட்டு பாராட்டியிருந்தார்.
இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியாகிய நல்ல வரவேற்பு பெற்று, வசூலை குவித்து வரும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தையும் பார்த்துவிட்டு இயக்குனர் சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
இதையும் படியுங்களேன்- தப்பு கணக்கு போட்ட தயாரிப்பாளர்… “கோப்ரா” செய்த தரமான சம்பவம்…!
திருச்சிற்றம்பலம் படம் அழகான ஒரு திரைப்படம் . மித்ரன் ஜவஹரின் உணர்ச்சி பூர்வமான எழுத்துக்கள், நித்யா மேனனின் சிறந்த நடிப்பு, தனுஷ் மற்றும் அனிருத்தின் காம்போ எப்போதும் சிறப்பு தான். பாரதிராஜாவின் அசத்தல் நடிப்பு மற்றும் பிரகாஷ்ராஜ் நடிப்பு என அத்தனையும் இந்த படத்திற்கு பெரிய பலமாக உள்ளது” என புகழ்ந்து தள்ளியுள்ளார் இயக்குனர் ஷங்கர்.
இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க, படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராசி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் என உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…