விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பீஸ்ட்” திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் தனது 66-வது படத்தில் நடிக்கவுள்ளார், இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார்.
படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 66” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார்.இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாகவும் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைக்க வுள்ளதாகவும் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக அமைந்தது.
இதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. பூஜையில் நடிகர் விஜய், தமன், இயக்குனர் வம்சி, நடிகை ராஷ்மிகா, தில் ராஜு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். அதற்கான புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
இந்த நிலையில், விஜய்யுடன் நடிக்க வேண்டும் என நீண்ட நாள் ஆசை ராஷ்மிகாவிற்கு நிறைவேறியுள்ளது. நேற்று டிவிட்டரில் இதை விட சிறந்த பிறந்த நாள் பரிசு எது இருக்க முடியும் என தளபதி 66 படத்தி இணைந்ததை நெகிழ்ச்சியுடன் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, இன்று பூஜையில், கொண்டாட்டத்தின் உச்சியில், பூரிப்புடன் விஜயை பார்த்து சிரித்தவாறு ஸ்டில் கொடுத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட அழகான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…