பெண்கள் ஆண்களிடம் விரும்பும் குணங்கள் எது தெரியுமா…?

காதல் மிக மிகப் புனிதமானது, மேலும் இது வித்தியாசமானவை உணர்வை கொடுக்கக்கூடிய ஒரு உறவு. காதலர்கள் இருவருக்குமே வித்தியாசமான குணங்கள் இருக்கும். அதிலும் பெண்கள் சில முக்கியமான குணம் கொண்ட ஆண்களை விரும்புவார்கள். ஆனால், அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். குறிப்பாக முக்கியமான நான்கு குணங்களை கொண்ட ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். அது என்ன அந்த நான்கு குணம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
காதல்
அதாவது எப்பொழுதுமே பெண்கள் தங்கள் விரும்பக்கூடிய ஆண் தனக்கு மட்டுமே சொந்தமானவனாக இருக்க வேண்டும் என விரும்புவது வழக்கம். எனவே, பெண்கள் தன்னை எப்பொழுதும் நேசித்து, பாதுகாப்பாக வைத்திருக்க கூடிய ஒரு நபரைத் தான் விரும்புகிறார்கள். ஏனென்றால் அவ்வாறு அதிக அளவு அன்பு கொண்ட ஆண்கள் தான், இவளை இழந்து விடுவோமோ என்ற பயத்தில் எப்பொழுதுமே அக்கறையாக பார்த்துக் கொள்வார்கள். எனவே இப்படிப்பட்ட குணம் கொண்ட ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.
பழக்கம்
அதாவது ஒரு பெண் தான் விரும்பக்கூடிய ஆணுக்கு பெண் தோழிகள் இருந்து, அவர்களை அந்த ஆண் தகப்பன் போல அக்கறையாக கவனித்து கொண்டாலும் பெண்களுக்கு பிடிக்கும். காரணம் என்னவென்றால் யாரோ ஒரு பெண்ணை அவன் நன்றாக பார்த்துக் கொள்ளும் போது நம்மையும் நன்றாக கவனித்துக் கொள்வான் எனும் எண்ணம் தோன்றுவதால் தானாம். இது போன்று பெண் தோழிகளுடன் அக்கறையாக நிதானமாக நடந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்.
கனவு
பெண்கள் தங்களது கனவுகளை நிறைவேற்ற வேண்டுமென பெரிதும் முயற்சி செய்வார்கள். ஆனால் அப்படிப்பட்ட கனவுகள் நிறைவேறவில்லை என்னும் பட்சத்தில் அவர்கள் மனமுடைந்து விடுவார்கள். எனவே தான் விரும்பக்கூடிய ஆண் தனது கணவு மற்றும் இலட்சியத்தை புரிந்து கொண்டு தன்னுடன் இணைந்து வாழ்க்கை நடத்த கூடியவராக இருந்தாலும் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். ஒரு பெண் ஏதேனும் தொழில் அல்லது தேர்வுகளில் வெற்றி பெரும் போது பாராட்டும் ஆண்களையும் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.
புத்திசாலி தானம்
பெண்கள் பல சமயங்களில் புத்திசாலித்தனமான ஆண்களுடன் வாழ்க்கையை செலவிட விரும்புவார்கள். ஏனென்றால் ஆண்களின் பேச்சில் காணப்படக்கூடிய புத்திசாலித்தனத்தால் பெண்கள் ஈர்க்கப்படுவார்கள். அதுமட்டுமல்லாமல அவர்கள் இருவருக்கும் இடையில் சண்டை ஏற்படும் பொழுது பெண்ணுடன் சண்டையிடுவதற்கு பதிலாக அவளை புரிந்துகொண்டு நேசிக்கக் கூடிய ஆண்களையும் பெண்கள் அதிகம் நேசிப்பார்கள் என கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
சீக்கியர் கொலை வழக்கு : சஜ்ஜன் குமாருக்கு மீண்டும் ஆயுள் தண்டனை வழங்கிய டெல்லி நீதிமன்றம்!
February 25, 2025
AUSvSA : ‘குறுக்கே வந்த கவுசிக் மழை’… போட்டியை ரத்து செய்தது ஐசிசி!
February 25, 2025
மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!
February 25, 2025
“விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எனது கட்சியில்..,” சீமான் ‘சாஃப்ட்’ பதில்!
February 25, 2025