விஜய்க்கு பிடித்த ரஜினி திரைப்படம் என்ன தெரியுமா..?
தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்கக்கூடிய நடிகர் விஜய், மேலும் விஜய் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சமீபத்தில் சூர்யாவின் சூரரை போற்று படத்தினை ஓடிடியில் வெளியிடவுள்ளதாக அறிவித்ததை தொடர்ந்து மாஸ்டர் படமும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவியது. மேலும் இதை பற்றி அப்டேட் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் விஜய்க்கு ரஜினி நடித்த திரைப்படங்களில் எந்த படம் பிடிக்கும் என்ற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது ஆம், நடிகர் விஜய்க்கு ரஜினி நடித்த திரைப்படத்தில் அண்ணாமலை திரைப்படம் மிகவும் பிடிக்குமாம்