உருளைக்கிழங்கு சாப்பிடவதற்கு மட்டும் இல்லங்க.! இதெற்கெல்லாமும் பயன்படுகிறது? என்னனு தெரியுமா?

Default Image
இந்த பதிவில் உருளைக்கிழங்கு மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னென்னெ என்று தெரிந்து கொள்ளாலாம்.

நாம் சாப்பிடும் அனைத்து உணவுப்பொருள்களுக்கும் உணவுப்பொருள் என்பதை தாண்டி பல்வேறு பலன்கள் உள்ளது. ஆனால், பெரும்பானோருக்கு அதை பற்றி தெரிவது கிடையாது. அந்த வகையில், உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு உணவுப்பொருள் என்னெவென்றால் உருளைக்கிழங்கு தான். எல்லாருடைய சமையலறைகளிலும் உருளைக்கிழங்கு கண்டிப்பாக இருக்கும் அதில் மாற்றமே இல்லை.

உருளைக்கிழங்கிற்கு சமையலறையைத் தாண்டியும் என்னடா பலன் இருக்கிறது என்று கேக்கிறீங்களா.? ஆம்… உருளைக்கிழங்கு நமது வீட்டை சுத்தமாக பராமரிப்பது முதல் காயங்களை ஆற்றுவது வரை பல நன்மைகளை கொண்டுள்ளது.

கறைகளை நீக்க:

உங்கள் குழந்தைகள் பள்ளி அல்லது வீட்டில் விளையாடி கொண்டிருக்கும்போது, அழுக்கு அதிகமாக படுவதுவுண்டு, இதனை நீக்குவதற்கு கடினமாக துவைக்க வேண்டும். எனவே, ஆடையை துவைக்கும்போது அரை உருளைக்கிழங்கை கறையுள்ள பகுதியின் மீது நன்கு தேய்க்க வேண்டும். சட்டையில் உள்ள மை கறைகளிலும் நன்றாக போக்கும்.

ஜன்னல்களை சுத்தப்படுத்த:

அட ஆமாங்க உருளைக்கிழங்கு கண்ணாடியை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது. வெறும் உருளைக்கிழங்கை எடுத்து உங்கள் கண்ணாடி ஜன்னல்கள், கார் விண்ட்ஸ்கிரீன் மேல் தேய்க்கவும். இதன்மூலம் உங்கள் கைகளுக்கு சேதம் விளைவிக்காமல் ஒளிரும் கண்ணாடியை திரும்ப பெறலாம்.

உணவில் இருந்து உப்பை நீக்க:

சமைக்கும்போது தெரிந்தோ தெரியாமலோ உணவில் உப்பு அதிகமாகிவிட்டது என தெரிந்தால் அதனை வேஸ்ட் செய்ய வேண்டாம். அதற்கு பதிலாக அதில் சில உருளைக்கிழங்கு துண்டுகளை நறுக்கி போடவும். இதனை இப்போ சூடு வைத்தால் போதும் உப்பின் அளவை குறைத்துவிடும்.

பாத்திரங்கள் பிரகாசிக்க:

உங்கள் பாத்திரங்கள் கறையுடன் காணப்பட்டால் அதனை சரி செய்ய உருளைக்கிழங்கை அசால்ட்டாக பயன்படுத்தலாம். பாத்திரத்தில் கறை இருக்கும் இடத்தில் உருளைக்கிழங்கை தேய்த்து நீரில் பாத்திரத்தை ஊறவைத்து விளக்குவது  அல்லது உருளைக்கிழங்கு வேகவைத்த நீரில் பாத்திரத்தை ஊறவைத்து கழுவினால் பாத்திரம் பளிச்ன்னு பிரகாசமாக மாறிவிடும்.

பூச்செடிகள் வளர்க்க:

உருளைக்கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் செடிகளை நன்றாக வளர்க்க உதவும். எப்படி எனறால்..? உருளைக்கிழங்கு எடுத்து கொண்டு அதில் ஒரு துளையிட்டு அதற்குள் செடியை வைத்து அதனை அதன்பின் அதனை மண்ணிற்குள் புதைக்கவும். இது செடி நன்கு வளர்வதற்கான ஊட்டச்சத்தை வழங்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்