மாநகரம் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கிற்கான தலைப்பு மற்றும் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கடந்த 2017 ம் ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியான திரைப்படம் மாநகரம். இந்த திரைப்படம் லோகேஷ் கனகராஜிற்கு முதல் திரைப்படமாகும். இந்த படத்தில் நடிகர் ஸ்ரீ, சார்லி, மதுசூதனன், சந்தீப் கிஷன், ரெஜினா, முனீஸ்காந்த் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர். அந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் மிகவும் சிறந்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றது என்றே கூறலாம்.
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் வாங்கி அவரே இயக்கவுள்ளார். இந்தப் படத்தை தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தயாரிக்கவுள்ளார்.
இந்த இந்தி ரீமேக்கில் நடிகர் விக்ராந்த் மாசே, நடிகர் விஜய் சேதுபதி, ரன்வீர் ஷோரே மற்றும், சச்சின் கடேகர் தன்யா மாணிக்டலா, ஹ்ரிது ஹரூன், சஞ்சய் மிஸ்ரா, ஆகியோர் நடிக்கவுள்ளன்னர்.
மேலும் இந்த திரைப்படத்திற்கான போஸ்டர் மற்றும் படத்தின் தலைப்பை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். படத்திற்கு “மும்பைகர்’ என்று டைட்டில் வைத்துள்ளனர்.
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…