நெற்றியில் குங்குமம் மற்றும் திருநீறு பூசுவதன் உண்மையான காரணம் என்ன தெரியுமா !
இந்து சமயத்தில் நாம் திருநீறு பூசுதல் ,குங்குமம் ,சந்தனம் நெற்றியில் இடுதல் மிகவும் முக்கியமான ஒன்று.நாம் ஒவ்வொரு நாளும் நெற்றியில் திருநீரு ,குங்குமம் ,சந்தானம் இட்டு கொள்வது மிகவும் சிறந்தது.
இதற்காக முக்கிய காரணம் என்ன வென்றால் நாம் மூளையின் அதிகமான நரம்புகள் நெற்றி பொட்டின் வழியாக செல்கிறது. இதனால் நெற்றி பகுதியானது அதிகளவில் உஷ்ணமாகவே காணப்படும். இதனை நாம் எவ்வாறு சரி செய்வது என்றால் அது திருநீறு ,குங்குமம் மற்றும் சந்தனம் இடுவதால் நெற்றி பகுதி குளிர்ச்சியாக இருக்கும்.
மேலும் சில பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவதை தவிர்த்து டிக்கர் பொட்டு வைத்து வருகிறார்கள்.இதனால் அவர்கள் பல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும். இதனால் நெற்றிபொட்டில் சூரிய ஒளிபடாது. மேலும் டிக்கர் பொட்டில் இருக்கும் பசை தோலில் அரிப்பை ஏற்படுத்தும். எனவே நாம் மிக சிறந்த கிருமிநாசினியாக விளங்கும் குங்குமம் ,சந்தானம் மற்றும் திருநீறை தினமும் நெற்றியில் பூசுவது நல்லது.