தினமும் காலையில் பூண்டு சாப்பிடுவதால் என்ன பலன் தெரியுமா?

பூண்டு சமையலுக்கு மட்டுமல்ல பல்வேறு மருந்து பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுகிறது என்பது நமக்கு தெரிந்தது தான். இந்த பூண்டை தினமும் தொடர்ச்சியாக சாப்பிடுவதால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும், அவற்றை குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
பூண்டு சாப்பிடுவதால் நன்மைகள் அதிகம் உள்ளது, ஆனால் எப்போது எப்படி சாப்பிட வேண்டும் என தெரியுமா? காலையில் வெறும்வயிற்றில் பூண்டுகளை சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதால் தொற்று நோய்கள், பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்குதலால் உள்ளுறுப்புகளில் ஏற்படும் நோய்கள் தவிர்க்கப்படுகிறது. பூண்டிலுள்ள அலிசின் எனும் ஆண்டிஆக்சிடன்ஸ் காரணமாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
மேலும் கொழுப்பை கரைக்க கூடிய சத்துக்கள் இதில் அதிகம் உள்ளது எனவே பூண்டை தேனில் ஊறவைத்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைய வேண்டும் என விரும்புபவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். மேலும் இவ்வாறு தேனில் ஊறவைத்த பூண்டை சாப்பிடுவதை இருமல் நீங்குவதுடன், இரதம் அதிகளவில் விருத்தியடையவும் உதவுகிறது. நரம்பு மண்டலத்தையும் பாதுகாப்பாக வலுவுடன் வைத்திருக்க உதவுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025
“நான்தான் சம்மனை கிழிக்கச் சொன்னேன், என்னை கைது செய்ய வேண்டியதுதானே” – சீமான் மனைவி கயல்விழி!
February 28, 2025