ரக்ஷா பந்தனின் சிறப்பு என்ன தெரியுமா?
ரக்ஷா பந்தனின் சிறப்பு அம்சங்கள்.
ரக்ஷா பந்தன் பண்டிகையின் சிறப்பு அம்சம் என்னவென்றால், பெண்கள் தங்களது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது ஆகும்.
இந்த நாள் கொண்டாடுவதற்கு காரணம் என்னவென்றால், ஒரு, ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது. மணிக்கட்டில், கயிறு காட்டியவுடன், அந்த ஆண் தனது சகோதரிக்கு ஏதாவது ஒரு பரிசு அல்லது தன்னால் இயன்ற பணத்தை வழங்குவது வழக்கம்.
வழக்கப்படி இந்த பண்டிகையை இந்து மதத்தினர் தான் கொண்டாடுவது வழக்கம். ஆனால், தற்போது இந்த பண்டிகை ஒரு சமுதாய பண்டிகையாக தான் அனைவரும் கருதுகின்றனர். இந்த பண்டிகையானது வட இந்தியாவில் தான் மிகவும் பிரபலமாக இருந்தது. ஆனால், தற்போது இப்பண்டிகை தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது.
இந்த நாளில், மக்கள் தங்களது எல்லையை பாதுகாக்கும் இராணுவத்தினருக்கு கூட ராக்கி கட்டி, தங்களது மகிழ்ச்சியை பாசத்தையும் வெளிப்படுத்துவதை காணலாம்.