பெண்கள் கர்ப்பகாலத்தில் மனஅழுத்ததோடு இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா…?

Default Image

இன்றைய காலகட்டத்தில் சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மன அழுத்தம் என்பது உடலோடு ஊறிப்போன ஒன்றாக மாறிவிட்டது. கர்ப்பகாலத்தில் கர்ப்பிணி பெண்கள் தங்களுக்கு மன அழுத்தம் ஏற்படாதவாறு காத்துக் கொள்வதே சிறந்தது. ஆனால் இந்த எந்திரமயமான காலகட்டத்தில் அதிகமான கர்ப்பிணி பெண்கள் மன அழுத்தவுடன் தான் வாழ்கின்றனர்.

Image result for கர்ப்பிணி பெண்கள்

சுகப்பிரசவம் ஆவதற்கு….!

பொதுவாக ஒரு கர்ப்பிணிக்கு சுகப்பிரசவம் ஆவதற்கு உடல்நலம் மட்டும் போதுமானது அல்ல. மனநலமும் நன்றாக அமைய வேண்டும் என்பது தான் மருத்துவர்கள் முக்கியமாக பரிந்துரைக்கின்றனர்.

ஆரோக்கியமான வாழ்வு :

Image result for கர்ப்பிணி பெண்கள்

இந்நிலையில், மகிழ்ச்சியான மனநிலை, பெண்களுக்கு சுரக்கும் பல ஹார்மோன்களை ஊக்கப்படுத்துகிறது. ஆரோக்கியமான கர்ப்ப வளர்ச்சிக்கு உதவுகிறது. பிரசவ நேரத்தில் இடுப்புத் தசை இயக்கங்களைக் குஷிப்படுத்துகிறது. பிரசவம் எளிதாக நிகழ்வதற்கு துணை புரிகிறது. பிரசவத்துக்குப் பிறகு தாய்ப்பால் சுரத்தல், கருப்பைத் தன்னிலை மீள்தல் உள்ளிட்ட உடலியல் இயக்கங்கள் சீராக செயல்பட உதவுகிறது.

மனசோர்வு :

Image result for கர்ப்பிணி பெண்கள்

கர்ப்பிணி பெண்களுக்கு மனசோர்வு ஏற்படுவது சாதாரணம் தான். ஆனால் இதில், மிதமான மனச்சோர்வு, தீவிர மனச்சோர்வு என இரண்டு வகைகள் உண்டு.

மிதமான மனசோர்வு :

மிதமான மனச்சோர்வு பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு ஏற்படவே செய்யும். அதில் கவலைப்பட ஒன்றுமில்லை.

தீவிர மனசோர்வு :

கர்ப்பிணி பெண்களுக்கு தீவிர மனசோர்வு ஏற்பட்டால், அதனை கண்டிப்பாக கவனிக்க வேண்டும். தீவிர மனசோர்வுக்கு அறிகுறி என்னவென்றால், உறக்கமில்லாமை மற்றும் உடலில் சக்தி இல்லாமை தான். இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்களை தீவிரமாக கவனிக்க வேண்டும்.

மனநல பிரச்சனை :

Image result for கர்ப்பிணி பெண்கள்

 

மனநலப் பிரச்சனை உள்ள கர்ப்பிணிகள் தொடக்கத்திலிருந்தே சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால், கருவில் வளரும் குழந்தைக்கு அவ்வளவாக பாதிப்பு ஏற்படுவதில்லை.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்