உங்கள் முகத்தில் தினமும் கற்றாழை ஜெல்லை பூசுவதால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா…?

Default Image

கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் பூசுவதால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது.

நம்மில் பலரது வீடுகளில் கற்றாழை வளர்க்கப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த கற்றாழை நமது உடல் நலம் மற்றும் சரும அழகை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கற்றாழை பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. தற்போது இந்த பதிவு கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் பூசுவதால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்பது பற்றி பார்ப்போம்.

நம்மில் அதிகமானோர் நமது சரும அழகை மேம்படுத்துவதற்காக மாய்ஸ்சுரைசர் போன்ற விலையுயர்ந்த கெமிக்கல் கலந்த கிரீம்களை வாங்கி உபயோகிப்பதுண்டு. அதற்கு பதிலாக உங்கள் சருமத்தை ஆரோக்கியமானதாகவும், அழகானதாகவும் மாற்ற கற்றாழை ஜெல்லை தினமும் பூசி வந்தால் இது சருமத்தை பொலிவாக்கும். அதோடு சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதனை பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் முகத்தில் பூசலாம். ஏனென்றால் ஷேவிங் செய்யும் போது முகத்தில் வெட்டு காயங்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இது உதவுகிறது.

அதிகமான வெப்ப தாக்கத்திலிருந்து நமது சருமத்தை பாதுகாப்பதில் கற்றாழை முக்கியப் பங்கு வகிக்கிறது. கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் பூசிவந்தால் இது நமது சருமத்தை வறட்சியடையச் செய்யாமல் ஈரப்பதமாக வைத்துக்கொள்ளும். மேலும் இது வெப்பத்தின் தாக்கத்தால் ஏற்படக்கூடிய சரும பிரச்சினைகளில் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது.

மிகவும் குறைவான வயதிலேயே முதுமையான தோற்றம் அளிப்பது போல் சிலருக்கு தோன்றலாம். அப்படிப்பட்டவர்கள் தினமும் முகத்தில் கற்றாழை ஜெல்லை பூசி வந்தால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் வறட்சியான தன்மைகள் மாறி முகத்தின் தோல் பளபளப்பாக மாறுவதோடு, இது சருமத்தை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும். இதன் விளைவாக நாம் வயதானவராக இருந்தாலும் நமது முகத்தில் இளமை தோற்றத்தை உருவாக்க கூடிய ஆற்றல் கற்றாழை ஜெல்லுக்கு உள்ளது.

இன்று பலருக்கு முகத்தில் அதிகமான பருக்கள் ஏற்படுவது வழக்கம். இப்படிப்பட்டவர்கள் கற்றாழை ஜெல்லை உபயோகப்படுத்தலாம். அலர்ஜி எதிர்ப்பு மற்றும் பருக்களை போக்கும் பண்புகள் அதிகமாக காணப்படுகிறது. இதனை தினமும் பூசி வந்தால் முகத்தில் உள்ள முகப்பரு மற்றும் வடுக்கள் மறைந்து தோல் அழற்சி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்