பெண்களே கருச்சிதைவு ஏற்படுவதற்கு என்ன காரணம் தெரியுமா ?
- கரு சிதைவு ஏற்படுவதற்கான காரணங்கள், மற்றும் இதனை தடுப்பதற்கான வழிகள்
இன்றைய சமூகத்தில் பெண்களை பொறுத்தவரையில், ஆண்களை விட உயர்வான இடத்தில தான் உள்ளார்கள். பெண் என்றால் ஒதுக்கப்பட வேண்டியவள் அல்ல போற்றுதற்குரியவள், பெருமைக்குரியவள்.
பெரும்பாலான பெண்கள் இன்று கருச்சிதைவு செய்வதற்கு பயமின்றி, இப்படிப்பட்ட காரியத்தில் இறங்குகின்றனர். சிலருக்கு தங்களது உடல் பெலவீனத்தினாலும் ஏற்படுகிறது.
இந்த பதிவில் கரு சிதைவு ஏற்படுவதற்கான காரணங்கள், மற்றும் இதனை தடுப்பதற்கான வழிகள் பற்றியும் பார்ப்போம்.
கரு சிதைவு ஏன் ஏற்படுகிறது ?
தாயின் உடல்நிலை
கரு சிதைவு ஏற்படுவதற்கு தாயின் உடல்நிலை மிக முக்கிய காரணமாக கருதப்படுகிறது. தாயின் கர்ப்பப்பை கருவை தங்குவதற்கு ஏற்ற சக்தி இல்லாத போது கரு சிதைவு ஏற்படுவதாக மருத்துவர்கள் தங்களது ஆய்வில் தெரிவிக்கின்றனர்.
கரு வளர்ச்சி
கரு சிதைவு ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் கருவின் வளர்ச்சி சரியாக இல்லாத போது கரு சிதைவு ஏற்படுகிறது. கருப்பையில் கரு சரியாக உருவாகாத பட்சத்தில் கருச்சிதைவு தானாகவே ஏற்பட்டு விடும். இரட்டைக் கருப்பை இருப்பதனாலும் கருச்சிதைவு ஏற்பட்டு விடுகிறது.
மேலும், கருவானது கருப்பையில் சரியான முறையில் தங்காமல் இருத்தலும், கருப்பையின் வாய் திறந்திருத்தலும் அபார்சன் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருந்துகள்
நமது உடல் உடல் ஆரோக்கியத்தில் குறைவு ஏற்படும் போது நாம் சில மருந்துகளை உபயோகிக்கின்றோம். இந்த மருந்துகள் கருவை பாதித்து, கரு சிதைவு ஏற்பட வழிவகுக்கிறது.
மது போதை
இன்று நாகரீகம் என்கின்ற பெயரில் சமூகத்தின் செயல்பாடுகள் தலைகீழாக சென்று கொண்டிருக்கிறது. இன்று பெண்களும், மதுவுக்கும், போதை வஸ்துக்களுக்கும் அடிமையாகி இருக்கின்றனர்.
பெண்கள் புகை பிடிப்பதும், மது அருந்துவதும், புகையிலை போன்ற போதை வஸ்துகளை எடுத்துக் கொள்வதும் கருச்சிதைவை வலிந்து அழைக்கும் காரணிகள். மனநலக் கோளாறுகள் கருச்சிதைவில் கொண்டுபோய் விட்டு விடுகின்றன.
பயணங்கள்
பெண்கள் கருவுற்று மூன்று மாதங்களுக்கு வாகன பயணங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. முதல் மூன்று மாதங்களில் கருச்சிதைவு ஆபத்து அதிகமென்பதால் எடை அதிகமான பொருட்களைத் தூக்குதல் கூடாது. வீணாக உடலை வருத்திக்கொள்ளக் கூடாது.