குளிர்காலம் என்பது மிதவெப்ப மண்டல காலநிலையுள்ள இடங்களில் குளிர் அதிகமாக உள்ள ஒரு பருவ காலம் ஆகும். இக்காலத்தில் இரவு நேரம் அதிகமாகவும் பகல் நேரம் குறைவாக இருக்கின்ற மாதிரி தெரியும். இக்காலத்தில் தான் அதிக உடல் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் இக்காலத்தில் சளி, இருமல், காய்ச்சல், தலைவலி, போன்ற பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
பொதுவாக குழந்தைகளின் சருமம் மிக மிருதுவாக மென்மையாகவும் இருக்கும். கொசு, எறும்பு ஆகியவை கடித்த உடனே சிகப்பாக மாறிவிடும் கொப்புளங்கள் மற்றும் அலர்ஜியும் அவர்களுக்கு ஏற்படும். இதனால் குழந்தைகளின் சரும பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம். கன்னம் மற்றும் உதடுகளில் வெடிப்பு ஏற்படுதல் பொதுவாக இந்த பிரச்சனைகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படும். உதடு வெடிப்பை தடுக்க உதட்டில் நெய் மற்றும் எண்ணெய்யை பூசலாம்.
குழந்தைகளுக்கு தொற்று நோய் என்பது மிக எளிதில் தாக்கக்கூடும் அதுவும் குளிர்காலத்தில் குழந்தைகளின் காது, மூக்கு, தொண்டை போன்ற பகுதிகளில் தொற்று நோய்கள் எளிதில் தாக்கும். இதற்கு காரணம் குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது தான். முக்கியமாக அதிக வாசனைகொண்ட சோப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளின் துணியை அலசுவதற்கான சோப்பையும் அதீக வாசம் கொண்டதாக இருந்தால் தவிர்க்க வேண்டும். தோல் சம்பந்தப்பட்ட நோய் எதுவென்றாலும் குழந்தையை நேரில் மருத்துவரிடம் அழைத்து சென்று சிகிச்சை அளிப்பது மிகவும் நல்லது.
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…