நம் உதடு கருமை நிறமாக மாறுவதற்கு என்ன காரணம் தெரியுமா?

Default Image

ஒவ்வொருவருக்கும் தனது முகம் அழகாக இருக்கவேண்டும், பார்ப்பவர்களுக்கு அழகாக தெரிய வேண்டும் என ஆசை இருக்கதான் செய்யும். இருப்பினும் வெள்ளை நிறத்துடன் இருப்பவர்கள் கூட தங்கள் முகத்தில் உள்ள உதடு கருமை நிறமாக மாறி இருப்பதால் லிப்ஸ்டிக் அடித்து வெளியில் செல்லக் கூடிய நிலைமை ஏற்படுகிறது. ஒருவரது முகத்திற்கு அழகு சேர்க்க வேண்டுமானால் உதடு சிவப்பு நிறமாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் பலர் மனதிலும் நிலைகொண்டுள்ளது. ஆனால் இந்த உதடு கறுப்பு நிறமாக மாறுவதற்கு காரணம் என்ன என்பது குறித்து நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

பெரும்பாலும் உதடுகளில் வெடிப்புகள் விழுந்து காயம் உருவாக்குவதால் தான் உதடுகள் கருப்பு நிறமாக மாறுகிறது. எனவே உதட்டை நாம் பராமரிப்பதற்கு நல்ல லிப் பாம் அல்லது வெண்ணெய் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம். மேலும் உதட்டில் உள்ள இறந்த சருமத்தை அகற்றாமல் அப்படியே வைத்திருப்பதாலும் உதடு கருமை நிறத்துடன் காணப்படும். இதை நாம் பல வழிகளில் சரி செய்யலாம் தேன் அல்லது எலுமிச்சை சாறை சர்க்கரையுடன் கலந்து உதட்டில் பூசி ஒரு நிமிடம் ஊற வைத்து விட்டு நன்றாக ஸ்கரப் செய்யும் போது உதட்டில் உள்ள கருமை நிறம் மாறும்.

மேலும் சூரியனிலிருந்து வரக்கூடிய கதிர்வீச்சுகள் மூலமாகவும் நமது உதடுகள் கறுப்பு நிறமாக மாறுகிறது. இதற்கு நாம் வெளியில் செல்லும் பொழுது லிப் பாம் தடவி கொண்டு வெளியில் செல்லலாம். அதுமட்டுமல்லாமல் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் உதடுகள் கருமை நிறமாக காணப்படும், இதற்கு காரணம் நிகோடின் உதட்டில் ஒட்டுவது தான். இதற்கு இரவு நேரத்தில் பாதாம் அல்லது  வெண்ணெயை உதட்டில் தொடர்ந்து மசாஜ் செய்து வரும்பொழுது உதட்டில் ரத்த ஓட்டம் சீராகி உதடு சிவப்பு நிறத்தில் மாறும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
rahul gandhi helicopter
appam (1) (1) (1)
amaran ott release date
Actor Jayam Ravi - Aarti
A Man Died in Guindy Hospital
Mike Tyson