தனுஷ் ரசிகர்களுக்கு ட்வீட்டர் கொடுத்த சர்ப்ரைஸ்.! என்ன தெரியுமா.?

Default Image

ட்வீட்டர் நிறுவனம் தனுஷ் நடித்துள்ளார் மாறன் படத்திற்கு பிரத்யேக எமோஜி வெளியிட்டுள்ளது.

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாறன். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரகனி, போஸ் வெங்கட், கேகே, மாஸ்டர் மகேந்திரன் போன்ற பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக படம் நேரடியாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இன்று இந்த திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகவுள்ள நிலையில், தனுஷ் ரசிகர்களுக்கு மேலும் உற்சாகம் தரும் வகையில், ட்வீட்டர் நிறுவனம் மாறன் படத்திற்கு பிரத்யேக எமோஜி வெளியிட்டுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இதற்கு முன்பு வெளியான மெர்சல்,பிகில் மற்றும் தனுஷ் நடிப்பில் வெளியான  ஜகமே தந்திரம் ஆகிய திரைப்படங்களுக்கு ட்வீட்டர் நிறுவனம் எமோஜி  வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்