வெங்காயத்தின் மதிப்பு தெரிஞ்சிட்டு, மருத்துவ குணம் தெரியுமா? நிறைய இருக்கு வாங்க பாக்கலாம்!
தினமும் நாம் சமையலுக்கு தவறாமல் பயன்படுத்த கூடிய பொருள்களில் ஒன்று தான் வெங்காயம். ஆனால், சமீபகாலமாக வெங்காயத்தின் விலை மிக அதிகமாக உயர்ந்து தங்கத்தோடு ஒப்பிடக்கூடிய அளவுக்கு அதன் மதிப்பை காட்டிவிட்டது. இதனால் வெங்காயம் கடுகு போடுவது போல கூட சமைக்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் தற்போது அந்த நிலை மாறிவிட்டது. இருப்பினும் இந்த வெங்காயத்தின் மதிப்பு தெரிந்துவிட்டது, அதன் மருத்துவ குணங்கள் பற்றி நாம் அறிந்து கொள்வோம்.
மருத்துவ பயன்கள்:
அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற அமிலம் தான் இந்த வெங்காயத்தின் காரத்தன்மைக்கு காரணம். இதுதான் நம்முடைய கண்களில் வெங்காயத்தை வெட்டும் பொழுது வரக்கூடிய கண்ணீருக்கும் முக்கியமான காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் அதிகப்படியான புரதச் சத்துக்கள் தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. வெங்காயத்தை இதயத்தின் தோழன் என்றும் அழைக்கலாம்.
அதாவது இதிலுள்ள சத்துக்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயற்கையாகவே கரைத்து உடல் முழுவதும் ரத்தத்தை தடை இல்லாமல் ஓட வைக்க வகை செய்கிறது. குளவி, தேனீ கொட்டி விட்டால் பயம் தேவையில்லை, அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை தடவும் பொழுது அதிலுள்ள என்சைம் உடலில் வலியையும் விஷத்தை முறித்துவிடும்.
அது மட்டுமல்லாமல், முதுமையில் வரக்கூடிய மூட்டு வலி மற்றும் அழற்சிகளை போக்குவதற்கு வெங்காயம் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வெங்காயத்துடன் கடுகு எண்ணெய் சேர்த்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். தற்போது ஏற்படக் கூடிய இருமல், நுரையிரல் அழற்சி மற்றும் சுவாசம் சார்ந்த பிரச்சனைகளுக்கு வெங்காய சாற்றை சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தீர்வு கிடைக்கும்.
புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இந்த வெங்காயம் புகைபிடித்தல் காற்று மாசுபடுதல் மற்றும் தேவையற்ற மனக்குழப்பங்கள் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய செல் சிதைவுகளை உடல் சரி செய்கிறது. பித்தம் குறையவும் இது வகை செய்கிறது. தொடர்ச்சியான இருமலுக்கு வெங்காயச் சாற்றை மோரில் கலந்து குடித்தால் நல்ல சுகம் கிடைக்கும். இவ்வாறு வெங்காயத்தில் எக்கச்சக்கமான நன்மைகளும் மருத்துவ குணங்களும் அமைந்துள்ளது.