சூரி & வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படத்தின் தலைப்பு என்ன தெரியுமா..??

சூரி & வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூரி தற்பொழுது இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் கதாநாயகனாக ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படம் முற்றிலும் ஒரு கவிதையின் நாவலை வைத்து கதை இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த பாடதிற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான தலைப்பு குறித்த தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆம், இந்த படத்திற்கு விடுதலை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவ்கள் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் சூரி இந்த படத்தை முடித்து விட்டு அண்ணத்தா படத்திலும், சூர்யாவின் 40 வது படத்திலும் நடிக்கவுள்ளார்.